Latest
குவாலா கெடா பள்ளிவாசலில் கொள்ளையா? வைரல் குற்றச்சாட்டு பொய்யானது; போலீஸ் விளக்கம்

அலோர் ஸ்டார், ஜனவரி-4,
குவாலா கெடாவில் உள்ள பள்ளிவாசலில் கொள்ளை நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ குறித்த தகவலை, அலோர் ஸ்டார் போலீஸ் மறுத்துள்ளது.
அந்த வீடியோவில், சிலர் ஒன்றுகூடி ஒருவரை தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
ஆனால் அது பள்ளிவாசலில் நடந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
அப்படியொரு சம்பவம் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் எங்கும் நடைபெறவில்லை என்றும், எந்த புகாரும் பெறப்படவில்லை என்றும் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் Syed Basri Syed Ali உறுதிப்படுத்தினார்.
எனவே, பொது மக்கள், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் எனவும், தவறான தகவல்கள் சமூக அமைதியை பாதிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
தவறான தகவலை பரப்புவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.



