
குவாலா திரங்கானு, அக்டோபர்-21, திரங்கானு, குவாலா நெரூசில் ஒரு பெண்ணைப் பின்னால் ஏற்றிக் கொண்டு wheelie சாகசம் புரிந்து, சாலை விபத்துக்குக் காரணமான Honda EX5 மோட்டார் சைக்கிளோட்டியை போலீஸ் தேடி வருகிறது.
தெலுக் கெத்தாப்பாங்கில் உள்ள எண்ணெய் நிலையத்தின் முன்புறம் நிகழ்ந்த அச்சம்பவத்தின் 11 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது.
அந்த wheelie சாகசத்தின் போது இருவரும் சாலையில் விழுந்து, எதிர்திசையில் வந்த Perodua Myvi காரின் முன்புறம் மோதியது வீடியோவில் தெரிகிறது.
எனினும் விழுந்த கையோடு இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
பாதிக்கப்பட்ட Myvi காரின் ஓட்டுநரான 23 வயது பெண் செய்த புகாரை அடுத்து போலீஸ் விசாரணையைத் தொடக்கியுள்ளது.