Latestமலேசியா

குவாலா லங்காட்டில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே கலவரம்; மூவர் கைது

குவாலா லங்காட், மார்ச்-25-சிலாங்கூர், குவாலா லங்காட், தெலோக் பங்லீமா காராங்கில் மோட்டார் சைக்கிளோட்டிகளிடையே வெடித்த கலவரம் தொடர்பில், மூவர் கைதாகியுள்ளனர்.

ஆடவர் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையில், 39 முதல் 45 வயதிலான அவர்கள் நேற்று முன்தினம் கைதுச் செய்யப்பட்டனர்.

வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டு போய் பார்த்தபோது, தனது 45 வயது மாமா கையில் பாராங் கத்தியயோடு நிற்பதும், சில ஆடவர்கள் அவரைத் தாக்க முயற்சிப்பதையும் கண்டதாக புகார்தாரர் கூறினார்.

உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வருவதற்குள் சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டனர்.

பின்னர் விசாரணையில் இறங்கிய போலீஸ், மூவரையும் கைதுச் செய்து ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தது.

இன்னொருவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் வீடியோ முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!