
யான், நவம்பர்-23 – கெடா, யானில் நேற்று காலை கடையில் ரொட்டி சானாய் பசியாறி விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் வழியில், உற்ற நண்பர்களான இரு சிறுவன்கள் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காலை 9 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தில், 10 வயது Izhar Adnan, 11 வயது Zaid Haris Abdullah ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் Zaid-டின் தந்தை நடத்தி வரும் ரொட்டி சானாய் கடையில் பசியாறி விட்டு வரும் வழியில் இருவரும் விபத்தில் சிக்கினர்.
விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநர் கைதாகி, அவரிடம் வாக்குமூலமும் பதிவுச் செய்யப்பட்டது.
ஆபத்தாக வாகனமோட்டியதன் பேரில் அவர் விசாரிக்கப்படுவார் என மாவட்ட போலீஸ் கூறியது.



