![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/92a1e8c4-3ff4-461f-993e-6195042660fd.jpg)
பெந்தோங், செப்டம்பர் -13 – கெந்திங் மலையில் கத்தியேந்திய மூவர் கும்பலால் தாம் கொள்ளையிடப்பட்டதாக, ஆடவர் ஒருவர் போலீசில் பொய் புகார் செய்தது அம்பலமாகியுள்ளது.
கொள்ளையர்கள் தம்மிடமிருந்த 20,400 ரிங்கிட்டையும் கொள்ளையிட்டுச் சென்றதாக அந்நபர் புகாரளித்தார்.
ஆனால், கொள்ளை நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட இடத்திலிருந்த CCTV கேமராவை போலீஸ் சோதனையிட்ட போது, 26 வயது தோட்டக்காரரின் குட்டு அம்பலமானது.
உண்மையில் அவர் கொள்ளையிடப்படவில்லை;
மாறாக, கெந்திங் கேசினோ சூதாட்ட மையத்தில் 20,400 ரிங்கிட்டையும் சூதாடி இழந்திருக்கிறார்.
சூதாடுவதற்காக தனது தங்க மோதிரம், தங்கச் சங்கிலி மற்றும் கைப்பேசியை மற்றோர் ஆடவரிடம் அவர் விற்றது CCTV-யில் தெரிந்தது.
இதையடுத்து, போலீசில் போலிப் புகாராளித்ததன் பேரில் அவ்வாடவர் தற்போது விசாரிக்கப்படுகிறார்.
பொய்ப் புகாருக்காக, அவருக்கு அதிகபட்சமாக 6 மாத சிறை மற்றும் 2,000 ரிங்கிட் விதிக்கப்படலாம்.