Latestமலேசியா

கைதொலைபேசியில் ஆபாசப் படங்கள் ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

மலாக்கா ,மார்ச் 4 – விரைவில் திருமணம் புரியவிருக்கும் ஆடவர் ஒருவர் தனது கை தொலைபேசியில் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை செலுத்தத் தவறினால் 27 வயதுடைய முகமட் நுர்ஹக்கிட் ரிட்சுவான் ஷாவுக்கு இரண்டு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி உத்தரவிடப்பட்டது. தனது முகநூலில் மற்றவரின் வாகனத்தை அவதூறான மற்றும் சங்கடமான வார்த்தைகளுடன் பதிவிட்டதால் பாதிக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக முகமட் நுர்ஹக்கிட்டின் கை தொலைபேசியை பறிமுதல் செய்து அதில் தடயவியல் கருவியின் மூலம் பரிசோதனை செய்தபோது ஆபாசப் படங்கள் இருந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 3ஆம்தேதி மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரியின் அலுவலகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கனி முன்னிலையில் முகமட் நுர்ஹக்கிட் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!