Latestமலேசியா

கைரிக்கு வழங்கப்பட்ட RM2.5 மில்லியன் இழப்பீடு RM830,000 ஆக குறைப்பு

கைரிக்கு வழங்கப்பட்ட RM2.5 மில்லியன் இழப்பீடு RM830,000 ஆக குறைப்பு

புத்ராஜெயா, பிப்ரவரி 19 –

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜாமாலுடின் (Khairy Jamaluddin) தாக்கல் செய்த அவதூறு வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட 2.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தொகையை மேல் முறையீட்டு நீதிமன்றம் குறைத்து, அதனை 830,000 ரிங்கிட்டாக நிர்ணயித்துள்ளது.

கைரி ஜாமாலுடின், உஸ்தாஸ் அபு ஷாஃபிக் (Ustaz Abu Syafiq) மீது தொடர்ந்த குற்றச்சாட்டு வழக்கின் படி, கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில், அபு ஷாஃபிக் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு கைரியை பற்றி தவறாக பரப்புரைத்ததாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 2025 ஏப்ரல் 18 அன்று உயர்நீதிமன்றம் கைரிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து 2.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை குறைத்துள்ளது.

நீதிமன்றம் தெரிவித்ததாவது, அவதூறு வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடு பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு அளிப்பதற்காக மட்டுமே. அது அதிக லாபம் அளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தற்போதைய நீதிமன்ற நடைமுறைகளை கருத்தில் கொண்டு, முன்பு வழங்கப்பட்ட தொகை அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது .

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்கள் மிக வேகமாகப் பரவுகின்றன. எனவே, குறிப்பாக சமூக நம்பிக்கை பெற்றவர்களாக இருப்பவர்கள் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னரே கருத்துகளை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்தத் தீர்ப்பு, மலேசியாவில் அவதூறு வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீட்டு அளவுகள் குறித்து முக்கிய வழிகாட்டுதலாகக் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!