
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5 – சர்ச்சைக்குரிய பாடகரான ‘Namewee’, தைவான் சமூக ஊடகப் பிரபலம் சியே யூ-ஷின் (Hsieh Yu-hsin) கொலை வழக்கு தொடர்பில், இன்று அதிகாலை போலீசாரிடம் சரணடைந்தார்.
சமூக ஊடகத்தில் பதிவிட்ட அவர், தான் ஒருபோதும் சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கவில்லை என்றும் உண்மை வெளிச்சத்திற்கு வரும் வரை தான் முழுமையாக போலீசிடம் ஒத்துழைக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தைவானின் அப்பிரபலம், ‘Namewee’ உடனான சந்திப்பிற்கு பின், கோலாலம்பூரிலுள்ள தங்கும் விடுதியொன்றில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக போலீசாரல் கைது செய்பட்ட Namewee, போதைப்பொருள் உட்கொண்டவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர்மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.



