
கிளாந்தான், நவம்பர் 12 -: கிளாந்தான் மாநிலத்தின் குபாங் கேரியான் பகுதியிலுள்ள இஸ்தானா நெகிரி (Kelantan Istana Negeri) அரண்மனை முன் சட்டவிரோத கூட்டம் நடத்திய 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட மூன்று ‘ஒராங் அஸ்லி’ ஆண்களும் உள்ளடங்குவர். இவர்கள் நேற்று காலை சுமார் 11.40 மணியளவில் அரண்மனை முன் திரண்டதாக கூறப்படுகிறது.
போலீசார் அவர்களை கைது செய்யும் போது, சிலரிடம் இருந்து கிரீஸ் (keris), ஈட்டி (spear), வாள் (sword) போன்ற கூர்மையான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு மரக் கோல்கள், மூங்கில் குச்சிகள், செம்புத் தேநீர் பாத்திரம், செம்புக் கோப்பைகள், பல நாணயங்கள் மற்றும் மஞ்சள் நிற துணி ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
26 முதல் 67 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும் வருகின்ற சனிக்கிழமை வரை போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.



