
கோலாலம்பூர், ஏப்ரல்-1-Double-parking எனும் இரட்டை நிறுத்தமாக வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹார்ன் அடித்து கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண்ணின் வீடியோ வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு மணி நேரமாக ஹாரன் அடித்தும் அந்த Perodua Ativa-வின் உரிமையாளர் வராததால், கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், அந்த காரை அம்மாது சேதப்படுத்தினார்.
பின்னர், அங்கிருந்த பொது மக்கள் ஒன்றுசேர்ந்து காரை தூக்கி அப்புறப்பப்படுத்தினர்.
காரின் உரிமையாளர் அப்பகுதியில் பிரபலமான ஒரு வர்த்தகர் என்றும், காருக்கு நேர்ந்த சேதம் குறித்து அவர் போலீஸில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பிறகு வெளியிட்ட வீடியோவில், காரின் உரிமையாளர் பக்கத்திலிருக்க, Ayu எனும் அம்மாது அவரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டார்.
பள்ளியிலிருந்து மகனை கூட்டி வர வேண்டியிருந்ததால்,
தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும், காருக்கு ஏற்பட்ட சேதங்களைத் தானே சரிசெய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இருவரும் சமரசமாக போய் விட்டதாகத் தெரிந்தாலும், double-parking செய்து ஒரு மணி நேரம் அலையவிட்ட கார் உரிமையாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என வலைத்தளவாசிகள் கேட்கின்றனர்.



