Latestமலேசியா

கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலில் தங்க இரத ஊர்வலத்துடன் களைக் கட்டும் விநாயகர் சதுர்த்தி

கோலாலம்பூர், ஆகஸ்ட்-27 – இன்றைய விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோலாலம்பூர் கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலில் நேற்று தங்க இரத ஊர்வலம் தொடங்கியது.

கொடியேற்றம் வைபவத்துடன், Jalan Pudu Lama, Jalan Tun Perak, Jalan Sultan, Jalan Tun Sambanthan உள்ளிட்ட சுற்றுவட்டார முக்கியச் சாலைகளில் விநாயகப் பெருமான் தங்க இரதத்தில் ஊர்வலமாக வந்தார்.

இதில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா, அறங்கவாலரும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையாற மஹிமாவின் தலைவருமான டத்தோ என். சிவகுமார் உள்ளிட்டோர் சிறப்பு வருகைப் புரிந்தனர்.

தங்க இரத ஊர்வலத்தின் சிறப்புகள் குறித்து டத்தோ சிவகுமார் வணக்கம் மலேசியாவிடம் பேசினார்.

பின்னர் Jalan Tun Tan Chen Lock மற்றும் Jalan Pudu வாயிலாக தங்க இரதம் கோர்ட்டுலை கோயிலுக்குத் திரும்பியது.

முழு முதற் கடவுளாம் விநாயகரின் தங்க இரத பவனியில் கலந்துகொண்டு அருள் பெற்ற பக்தர்களும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இன்று காலை முதலே அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம் என கோர்ட்டுமலை பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!