
கோலாலம்பூர், ஆக 21 – கோலாலம்பூர் மாநகரில் தினசரி சேவையில் ஈடுபட்டிருந்த பஸ்களுக்கு எதிராக JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் முன்று பஸ்களை பறிமுதல் செய்தது.
கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்திலிருந்து roadtax அல்லது சலை வரி இன்றி அந்த பஸ்கள் செயல்பட்டு வந்ததால் அவை முடக்கப்பட்டன.
இது தவிர அந்த பஸ்களுக்கான PUSPAKOM பரிசோதனை சான்றிதழும் கடந் மே மற்றும் ஜூன் மாதந்தோடு காலவதியாகிவிட்டது.
உள்நாட்டு ஓட்டுனர்கள் ஓட்டிச் சென்ற அந்த பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சாலை போக்குவரத்து சட்டத்திற்கு ஏற்ப அந்த பஸ்களுக்கு எதிராக குற்றப்பதிவும் வழஙகப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார்.
சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி நகர்ப்புற பயணிகள் மற்றும் சுற்றுப்பயணிகளை ஏற்றிச் செல்லும் பொது வாகனங்களை கடுமையாக கருதுவதாக அவர் கூறினார்.
சாலை போக்குவரத்து விதிகள் எப்போதும் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த நகரின் மையம் மற்றும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இடங்களில் பஸ்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.