
கோலாலம்பூர், ஜூலை 2 – வெளிநாட்டு ஆடவர் ஒருவர் தலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த வைரலான சம்பவம் கோலாலம்பூர் மருத்துவமனையின் பல மாடிகளைக் கொண்ட கார் நிறுத்துமிடத்தில் நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான ஏதேனும் உண்மைகள் விரைவில் பகிரப்படும் என்று டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுலிஸ்மி எப்பெண்டி சுலைமான் ( Sulizmie Affendy Sulaiman) தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
கோலாலம்பூர் மருத்துவமனையின் பல அடுக்களைக் கொண்ட கார் நிறுத்துமிடத்தில் கார் நிறுத்துவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் Sulizmie கேட்டுக்கொண்டார்.
வழிப்பறி கொள்ளையின்போது தாக்கப்பட்டதால் அந்த வெளிநாட்டு ஆடவர் தலையில் இரத்தக் காயத்தோடு இருக்கும் காணொளி இதற் முன் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பாதிக்கப்பட்டவர் சுயநினைவை இழக்கும் வரை தலையைப் பிடித்துக் கொண்டு வலியால் துடிப்பதை அந்த காணொளியில் காணமுடிந்தது.