
கோலாலத் திரெங்கானு, ஜன 26 – சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமாக கடந்த ஆண்டு 5,000 ரிங்கிட் வருமானம் பெற்றதாக முன்னாள் ராணுவத் தலைவர் ஹபிசுதீன் ஜன்தானின் மனைவி மீது கோலாத் திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி முகமட் அஷார் ஒத்மான்
( Azhar Othman ) முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை சல்வானி அனுவார் அலியாஸ் கமாருடின் ( Salwani Anuar @ Kamaruddin ) மறுத்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பெற்ற 5,000 ரிங்கிட் வருமானத்தை தனது வங்கிக் கணக்கில் சல்வானி வரவு வைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம்தேதி பெசுட்டிற்கு அருகே கெர்தேவிலுள்ள வங்கிக் கிளையில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பண பறிமாற்றம் , 2001 ஆம் ஆண்டின் பயங்கரவாத நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமான சட்டத்தின் துணைப்பிரிவு 4(1)(b) இன் கீழ் சல்வானிக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
அவர் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள்வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். ஏற்கனவே கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய 30,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் அதற்கான நிபந்தனைகளும் சல்மியாவுக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த வழக்கை குற்றம் சாட்டப்பட்டவரின் முந்தைய வழக்கு மற்றும் அவரது கணவரின் வழக்குடன் சேர்த்து விசாரிக்க கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்ற அரசுத் தரப்பு விண்ணப்பித்துள்ளதால் , இன்று அதே ஜாமீனை ஏற்றுக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்று MACC யின் அரசாங்க தரப்பு துணை வழக்கறிஞர் Maziah Mohaid
நீதிமன்றத்தில் தெரிவித்தார்.



