
கோலாலம்பூர், ஜூலை-16- கோலாலம்பூர், டேசா பண்டானில் (Desa Pandan) நேற்று காலை DBKL அமுலாக்க அதிகாரிகளை நோக்கி ஒரு நீண்ட பாராங் கத்தியை சுழற்றி ஆவேசமாக நடந்துகொண்ட 43 வயது ஆடவர் கைதாகியுள்ளார்.
காலை 11 மணிக்கு சட்ட விரோதக் கட்டுமானங்களை இடிக்கும் பணிகளின் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
Desa Pandan சாலைகளில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கடைகளை இடிப்பதற்காக DBKL, TNB, மற்றும் சிலாங்கூர் நீர் விநியோக வாரியமான SYABAS அமுலாக்கப் படையினர் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஆவேசமடைந்த அவ்வாடவர் பாராங் கத்தியை அங்குமிங்கும் சுழற்றியவாறு, DBKL அதிகாரிகளை கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினார்.
எனினும், சற்று நேரத்தில் அங்கிருந்த பொது மக்கள் அந்நபரை ஆசுவாசப்படுத்தினர்.
அரசு ஊழியர்களை, கடமையை நிறைவேற்ற விடாமல் தடுத்ததன் பேரில் அவர் பின்னர் கைதானார். அந்த சட்டவிரோதக் கட்டுமானங்கள் பின்னர் இடிக்கப்பட்டன.