
கோத்தா கினாபாலு, மார்ச்-2-சபாவில் காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற ஆடவர் மரணமடைந்த சம்பவத்தில், அவரது நண்பரை போலீஸார் சந்தேகத்தில் கைதுச் செய்துள்ளனர்.
ஆரம்பத்தில், அந்நபர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக நம்பப்பட்டது.
ஆனால், பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது உடலில் துப்பாக்கி காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் அவருடன் வேட்டைக்குச் சென்ற நண்பரை கைதுச் செய்து, கொலை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது விசாரணயில் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



