Latestமலேசியா

சமூக ஊடக உரிமம் பெற்ற Tik Tok மற்றும் WeChat; அடுத்துப் பெறவிருப்பது Meta-வும் Telegram-மும்

கோலாலம்பூர், ஜனவரி-1, நாட்டில் தொடர்ந்து செயல்பட அரசாங்கத்தால் உரிமம் வழங்கப்பட்ட முதலிரண்டு சமூக ஊடகச் சேவை வழங்குநர் அல்லது குறுந்தகவல் செயலி நிறுவனங்களாக, டிக் டோக்கின் ByteDance மற்றும் WeChat-டின் Tencent திகழ்கின்றன.

இன்று தொடங்கி அமுலுக்கு வந்துள்ள சமூக ஊடக ஒழுங்குமுறை மேலாண்மை விதிகளுக்கு விண்ணப்பித்துள்ள 4 நிறுவனங்களில் இந்த இரண்டு நிறுவனங்களும் அடங்கும்.

அடுத்து Telegram, உரிமம் பெறுவதற்கானக் கடைசி கட்டத்தில் உள்ளது.

வெகு விரைவிலேயே அதற்கு உரிம் கிடைத்து விடுமென, MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் கூறியது.

Facebook, Instagram, WhatsApp ஆகியவற்றின் தாய் நிறுவனமான Meta-வும் உரிமம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்திச் செய்ததும், Meta-வுக்கும் உரிமம் வழங்கப்டுமென MCMC அறிக்கையொன்றில் கூறியது.

இவ்வேளையில் X தளமும் You Tube-பை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனமும் இதுவரை MCMC-யிடம் விண்ணப்பிக்காமல் உள்ளன.

அரசாங்கம் நிர்ணயித்துள்ள 8 லட்சம் பயனர்கள் வரையறையை X தளம் பூர்த்திச் செய்யவில்லை என்பதால் அது விண்ணப்பிக்காமல் இருக்கக் கூடும்

என்றாலும் X தளப் பயனர்களின் உண்மை எண்ணிக்கையை உறுதிச் செய்யும் பணிகளில் MCMC இறங்கியுள்ளது.

கூகுளோ, You Tube வீடியோ பகிர்வு குறித்த சில ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளது; எனவே அதனுடன் பேசி வருகிறோம் என MCMC தெரிவித்தது.

சமூக ஊடகங்கள் தங்களின் செயலுக்கு தாங்களே பொறுப்பேற்பதை உறுதிச் செய்யும் இந்த உரிம விவகாரம் கடந்தாண்டு முதன் முறையாக முன்வைக்கப்பட்டது.

இணைய மோசடி, பகடிவதை, ஆபாச உள்ளடக்கப் பகிர்வு என குற்றச்செயல்களுக்கு சமூக ஊடகங்கள் துணைப் போவதால், அரசாங்கம் குறிப்பாக தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) முயற்சியில் அப்பரிந்துரை உதயமானது.

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது என்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி அப்போது எழுந்தது.

ஆனால், அது சாத்தியமே என்பது இந்த 4 நிறுவனங்கள் உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளதன் மூலம் இன்று நிரூபணமாகியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த தொடர் முயற்சிகளால், இந்தப் புத்தாண்டு தொடங்கி மலேசியர்களுக்கு இணையம் மேலும் பாதுகாப்பானதாக இருக்குமென நம்புவோம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!