Latestமலேசியா

மெக்னம் 4D ஜேக்போட்டில் RM11 மில்லியன் வென்ற பினாங்கு ஆடவர்

கோலாலம்பூர், மே-6 – ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்ற மெக்னம் குலுக்கலில் பினாங்கு பட்டவொர்த்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஆடவர் முதல் பரிசான 11 மில்லியன் ரிங்கிட்டை தட்டிச் சென்றார்.

அவ்வப்போது மெக்னம் 4D ஜேக்போட்டில் பந்தயம் கட்டி வரும் இவ்வாடவரின் பந்தய எண்கள் 6563 + 1599 ஆகும்.

அன்றைய இரவு குடும்பத்தோடு அமர்ந்து மெக்னம் குலுக்கலை அவர் நேரடியாக கண்டு களித்துள்ளார்.

முதலில் அவர் பந்தயம் கட்டிய எண்கள் சிறப்புப் பரிசில் இடம் பெற்றதே அவருக்கு மகிழ்ச்சி தான்.

சிறிது நேரத்தில் அவ்வெண்கள் முறையே இரண்டாவது மூன்றாவது இடங்களைப் பிடித்ததால் அவரின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

இவர் எண்கள் மீது பந்தயம் கட்டுவதை அவ்வளவாக விரும்பாத மனைவி கூட, இவருக்கு ஜேக்போட் விழுந்ததைக் கண்டு திகைத்து விட்டார்.

இப்பரிசு, அவரின் பணக் கஷ்டத்தைப் போக்கியதோடு மட்டுமல்லாது மனக்கஷ்டத்தையும் போக்கியுள்ளது.

இத்தனை நாள் தனது அனைத்து கஷ்டங்களிலும் பங்கேற்று பக்கபலமாக இருந்த மனைவியின் நீண்ட நாள் ஆசையான வெளியூர் சுற்றுலாவை நிறைவேற்றித் தர வாய்ப்புக் கிட்டியுள்ளது குறித்தும் அவர் குதூகலித்தார்.

அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம் என்பது இதுதான் போல..

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!