
சரவாக் , பிப்ரவரி 27 – சரவாக் சிமுன்ஜான் (Simunjan) பகுதியில் உள்ள சாகேங் (Sageng) தேசிய பள்ளி கட்டுமானத் தளத்தில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் 67 வயதுடைய தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிற்பகல் 2.08 மணியளவில் தரைத்தள தாங்கும் திறன் சோதனையின் போது பயன்படுத்தப்பட்ட கனரக கான்கிரீட் கட்டை சரிந்து விழுந்து அவரை தாக்கியது.
அவசர அழைப்பைத் தொடர்ந்து சரவாக் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், மருத்துவக் குழு பரிசோதனையின் போது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.
சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.



