Latestமலேசியா

சித்தியாவானில் KFC உணவகத்தில் கார் மோதியதில் காயமுற்ற 73 வயது மூதாட்டி மரணம்

சித்தியவான், மே 9 – சித்தியவான் , ஜாலான் முகமட் அலியில் KFC உணவகத்தில் SUV வாகனம் மோதியதில் காருக்கடியில் சிக்கி காயமுற்ற 73 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

நேற்றிரவு 9.05 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட ஏழு வாடிக்கையாளர்கள் காயம் அடைந்தனர்.

காயமுற்ற மூதாட்டி ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நேற்றிரவு 11 மணிக்கே இறந்து விட்டதை மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சித்தியவான் – லுமுட் சாலையில் 0.5ஆவது கிலோ மீட்டரில் சமிக்ஞை விளக்கிற்கு அருகே கம்போங் கோவிலிருந்து சுங்கை வாங்கை நோக்கிச் சென்ற வொல்வோ X C90 SUV வாகனத்தை 29 வயது ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த வாகனம் KFC உணவகத்தினுள் மோதியதில் அங்கிருந்த எட்டு வாடிக்கையாளர்கள் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வாகன ஓட்டுனர் 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) விதியின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!