
கோலாலம்பூர், ஏப் 15 – நேற்று காலமான நாட்டின் 5வது பிரதமர் துன் அப்துல்லா படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த, உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதியோடு வெளிவந்தார் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்.
கருப்பு உடையில் தேசிய பள்ளிவாசலின் பின்கதவு வழியாக வந்த நஜிப், படாவிக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அதே வழியாகவே புறப்பட்டு சென்றார். அவரது துணைவியார் ரோஸ்மாவும் பாக் லாக்கு மரியாதை செலுத்த அங்கு வந்திருந்தார்.
இந்நிலையில், மறைந்த படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம் மதியம் 1 மணியளவில் அங்கு வந்திருந்தார்.
அதே வேளை காலை 11.30 மணியளவில் அங்கு வந்திருந்த திரெங்கானு மாநில சுல்தான், சுல்தான் மிசான் சைனால் அபிடினும் (Sultan Mizan Zainal Abidin) படாவிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
படாவி பிரதமராக பதவி வகித்த காலக்கட்டத்தில், சுல்தான் மிசான் 13வது பேரரசராக செயல்பட்டார்.
இதனிடையே முன்னாள் பிரதமர்களான துன் மகாதீரும், முஹிடின் யாசினும் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்திச் சென்றனர்.
இதனிடையே, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் Lee Hsien Loongகும் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த அங்கு வந்திருந்தார். படாவி பிரதமராக இருந்த சமயம், அவரும் சிங்கப்பூரின் பிரதமராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.