
சுபாங், ஏப்ரல்-3-சிலாங்கூரில், சுமார் RM1.5 மில்லியன் மதிப்பில் ஹலால் அல்லாத கோழி மற்றும் பன்றி இறைச்சிகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோத உணவு விநியோக கும்பலை குறிவைத்து, Kampung Baru Subang-கில் பல அமுலாக்க துறைகள் இணைந்து Ops Taring Chiller எனும் இச்சோதனையை மேற்கொண்டன.
சான்றிதழ் இல்லாத பல பெட்டிகளில் கோழி இறைச்சி மற்றும் 30 டன் எடைக்கும் அதிகமான பன்றி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நடவடிக்கையில், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 32 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
இந்த கும்பல் இறைச்சிகளைக் கடத்தி சட்டவிரோதமாக சந்தைகளுக்கு விற்று வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.



