Latestமலேசியா

சிலாங்கூர் அரசின் திருமண வைபவம்; கிள்ளானில் தற்காலிக சாலைகள் மூடல்

ஷா ஆலாம், செப்டம்பர் -26,

சிலாங்கூர் இளவரசர் தெங்கூ அமீர் ஷா இப்னி சுல்தான் ஷரஃபுத்தீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ் (Tengku Amir Shah Ibni Sultan Sharafuddin Idris Shah Alhaj) அவர்களின் இராஜதிருமண விழாவை முன்னிட்டு, கிள்ளானைச் சுற்றியுள்ள பல முக்கிய சாலைகள் செப்டம்பர் 27 முதல் 29 ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தென் கிள்ளான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சாலை மூடல்கள் காலை எட்டு மணி முதல் விழா நிறைவடையும் வரை அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இஸ்தானா ஆலம்ஷா, கிள்ளான் பகுதியில் நடைபெறும் விழாவின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை அவசியமாக இருப்பதாகவும், குறிப்பிட்ட சில சாலைகள் முழுமையாக மூடப்பட்டு, சில சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படவுள்ளது.

பொது மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, மாற்று வழிகளைப் பயன்படுத்தி தேவையற்ற நெரிசலை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதே சமயம், சாலைகளைப் பயன்படுத்துவோர் பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இளவரசர் தெங்கூ அமீர் ஷா, வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி, இஸ்தானா ஆலம்ஷா வளாகத்தில் அமைந்துள்ள இராஜ பள்ளிவாசலில், சிக் அப்சா பாதினி அப்துல் அசீஸ் (Cik Afzaa Fadini Abdul Aziz) அவர்களை மணமுடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!