
கோத்தா திங்கி, அக்டோபர்-12,
ஜோகூர், சீனாய் – டெசாரு நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 3 வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில், மூவர் பலியாயினர்.
அதில் SUV வாகனம், கடத்தப்பட்ட சிகரெட்டுகளை ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படுவதாக, கோத்தா திங்கி போலீஸ் கூறியது.
அதன் 32 வயது ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
இன்னொரு SUV வாகனத்தை ஓட்டி வந்தது 25 வயது பெண் என்றும், Hatchback காரில் அடையாளம் தெரியாத ஓட்டுநர் 3 பயணிகளை ஏற்றி வந்ததாகவும் போலீஸ் கூறிற்று.
இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, இன்னொருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணமடைந்தார்.
அம்மூவரில் ஒருவர் hatchback ஓட்டுநர், இருவர் உடன் வந்த பயணிகள் ஆவர்.
சிகரெட்டுகளை ஏற்றி வந்த SUV வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் புகுந்துள்ளது; அதனை இரண்டாவது SUV தவிர்த்த போதும், பின்னால் வந்த hatchback வாகனத்தால் தவிர்க்க முடியாமல் விபத்து ஏற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது