Latestமலேசியா

சுங்கை பட்டாணி கண்காட்சி திடலில் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் வியாபாரி பலி; மூவர் காயம்

சுங்கை பட்டாணி, மே-22-கெடா, சுங்கை பட்டாணி, Dataran Jam Besar அருகே கண்காட்சி திடலில் நேற்று மாலை ஏற்பட்ட ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில், 42 வயது பலகார வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மூவர் காயமடைந்தனர்.

பலூன்களில் ஹீலியம் வாயுவை நிரப்பிக் கொண்டிருந்தபோது இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

வெடிப்பின் அதிர்வால் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இரும்புத் துண்டுகள் சிதறித் தாக்கியதில், Azmi Ahmad எனும் அந்த வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் குவாலா மூடா போலீஸ் கூறியது.
காயமடைந்தவர்கள் முறையே 16, 36, 49 வயதுடையவர்கள் ஆவர்.

இச்சம்பவம் தொடர்பாக 20 மற்றும் 30 வயதுடைய இருவர் கைதுச் செய்யப்பட்டுள்ள வேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தக் கண்காட்சித் திடல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கவனக்குறைவால் மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், போலீஸார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!