
சுங்கை பட்டாணி, செப்டம்பர்-22,
கெடா, சுங்கை பட்டாணியில் 30 வயதிலான ஒருவரை மர்ம நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி, கைக் கால்களில் காயத்தை ஏற்படுத்தினார்.
நேற்று பிற்பகல் பாயா நாஹு (Paya Nahu) அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்டவர், தன் அண்ணனைப் பார்ப்பதற்காக அங்கு வந்து காத்திருந்தார்; அப்போது, 20 வயதுடைய இளைஞன் குடிபோதையில் திடீரென அந்நபரைத் தாக்கியதாக, குவாலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர், ஹன்யான் ரம்லான் (Hanyan Ramlan) தெரிவித்ததார்.
காயமடைந்தவர் தற்போது சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்குத் தடுத்து வைக்க ஏதுவாக இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவுள்ளது