
சுங்கை பட்டாணி, நவம்பர்-3,
கெடா, சுங்கை பட்டாணி வட்டார மக்களுக்கு நேற்று காலை கேட்ட பயங்கர சத்தமானது, மலேசிய ஆயுதப் படையின் பயிற்சிகளில் ஒருபகுதியாகும்.
குவாலா மூடா போலீஸ் அதனை உறுதிப்படுத்தியது.
காலை 9 முதல் 10 மணி வரை பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறி, பொது மக்கள் அழைத்து புகாரளித்ததை அடுத்து இவ்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இராணுவப் படைத்தளத்திலிருந்து வந்த சத்தமே அது; பயிற்சிகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக போலீஸ் கூறிற்று.
பயிற்சி தொடருவதால், இன்று காலையும் மதியமும் கூட அதே சத்தம் மீண்டும் கேட்கக் கூடும்.
எனவே பொது மக்கள் நிதானம் காப்பதோடு, யூகங்களை எழுப்புவதோ உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பகிருவதோ கூடாது என, அத்துறை கேட்டுக் கொண்டது.



