Latestமலேசியா

சுங்கை பூலோ சிறையிலிருந்து பாகிஸ்தான் விசாரணைக் கைதி தப்பியோடினான்

கோலாலம்பூர், ஏப் 10 – சுங்கை பூலோ சிறையிலிருந்து நேற்று தப்பிச் சென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த விசாரணைக் கைதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கொள்ளை மற்றும் சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.

24 வயதான அந்த ஆடவன் , ஏப்ரல் 9 ஆம் தேதி சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல் கிடைத்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent முகமட் ஹபீஸ் முகமட் நோர் ( Mohd Hafiz Muhammad Nor ) தெரிவித்தார்.

“கைதியைக் கண்டுபிடித்து மீண்டும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீஸ்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சுற்றியுள்ள பகுதிகளிலும் மற்றும் பல்வேறு பிற நடவடிக்கைகள் மூலமாகவும் தேடுதல் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என Mohd Hafiz வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Muhammad Hassan என்று அடையாளம் கூறப்பட்ட அந்தக் கைதி கடைசியாக ஆரஞ்சு நிற டி-சட்டை மற்றும் கருப்பு நிற நீண்ட கால்சட்டை அணிந்திருந்ததாகக் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!