Latestமலேசியா

சுற்றுச்சூழல் தலைமை இயக்குநர், துணை இயக்குநர் மீதான MACC விசாரணை; ஒத்துழைப்பு வழங்க அமைச்சர் உறுதி

புத்ராஜெயா, ஜனவரி-30 – சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநர் மற்றும் துணைத் தலைமை இயக்குநர்களில் ஒருவர் மீதான MACC விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் டத்தோ ஸ்ரீ Joseph Arthur Kurup உறுதியளித்துள்ளார்.

அமைச்சில் எந்தவித ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தையும் சகிக்க முடியாது என்றார் அவர்.

மூத்த அதிகாரிகள் கைதான போதும், பொதுச் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு பாதிக்கப்படாமல் தொடரும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

சுற்றுச்சூழல் துறையின் தலைமை இயக்குநர் Wan Abdul Latiff Wan Jaffar மற்றும் அவரது துணைத் தலைமை இயக்குநர்களில் ஒருவரை, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் MACC முன்னதாகக் கைதுச் செய்தது.

e-waste எனப்படும் மின்னியல் கழிவுகள் நிர்வகிப்பு தொடர்பான முறைகேடுகள் குறித்து அவர்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.

விசாரணை தொழில்முறை முறையில் நடைபெறும் என்றும், பதவி, அந்தஸ்து எதுவாக இருந்தாலும் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு கரிசனம் இல்லை என்றும் MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!