
கோலாலம்பூர், நவம்பர் 3 –
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மனித கண்காணிப்பு மூலமாகவும் பாதுகாப்பை மேம்படுத்துவதாக Roblox நிர்வாகம் உறுதியளித்துள்ளது. தரவு பகிர்வு மற்றும் அரசாங்கம்
நிர்ணயித்த விதிமுறைக்கு இணங்குவதில் Roblox அரசாங்கத்துடன் ஒத்துழைக்க தயாராய் இருப்பதாக முகநூல் பதிவின் மூலம் இளைஞர் விளையட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார்.
பிரபலமான ஆன்லைன் விளையாட்டான Roblox-க்கு, இந்த செயலியை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஹன்னா கவலை தெரிவித்தார். இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும், ஒரு தாயாகவும், சில ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளின் நடத்தை மற்றும் உணர்ச்சிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பார்க்கும்போது தாம் கவலைப்படுவதாக ஹன்னா தெரிவித்தார்.
வேடிக்கையாக மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைக்கு சரியான குணாதிசயத்தையும் மதிப்புகளையும் உருவாக்கும் டிஜிட்டல் உலகத்தை நாங்கள் விரும்புகிறோம் என்று Roblox உடன் தனது புகைப்படத்தையும் ஹன்னா பதிவேற்றினார். Roblox போன்ற தளங்களில் இப்போது உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர், இதில் மலேசியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அடங்குவர் . எனவே இளம் பயனர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என ஹன்னா சுட்டிக்காட்டினார்.



