
கோலாலம்பூர், ஜூலை 15 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது செல்ல பூனை கிக்கியின் மறைவை, முகநூல் பக்கத்தில் பகிர்ந்து தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்திலிருக்கும் அந்தப் பூனையுடன் அவர் விளையாடுவதைக் காட்டும் புகைப்படங்களைப் பதிவேற்றி ‘கிகி இனி எங்களுடன் இல்லை நண்பர்களே’ என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார்.
சமூக ஊடகத்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோரின் கவனத்தை ஈர்த்துள்ள இப்பதிவில், ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி உட்பட பலர் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
SRC இன்டர்நேஷனல் சென்டர் பெர்ஹாடில் இருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் நஜிப் தற்போது ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.