
நிபோங் தெபால், ஆகஸ்ட் 18 – கடந்த சனிக்கிழமை, ஜாவி டோல் பிளாசா பகுதியில், ‘ஓப் பெர்செபாடு’ மற்றும் ‘ஓப் சாம்செங் ஜலானன்’ நடவடிக்கைகளின் போது போலீசாரின் உத்தரவை மீறி கவனக்குறைவாக லாரியைச் செலுத்தியதோடு மட்டுமல்லாமல் பணியில் இருந்த அதிகாரியை மோத முயன்ற லாரி ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இரண்டு டிப்பர் லாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் ஓடியதை கவனித்து, அவற்றை நிறுத்த உத்தரவிட்ட போது இச்சம்பவம் நடந்ததென்று செபராங் பிறை செலாத்தான் மாவட்ட காவல் தலைவர் ஜே. ஜனவரி சியோவோ தெரிவித்தார்.
அந்த 2 லாரிகளில் ஒன்றை ஓட்டி வந்த உள்ளூர் ஓட்டுநர், சிவப்பு சிக்னலை மீறிச் சென்று, பிரதான சாலைக்கு வேகமாகச் செல்வதோடு, பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரியை முயன்றுள்ளார்.
பின்னர், ரோந்து கார் பிரிவு உதவியுடன், ஜாலான் சுங்கை டான், கம்போங் லடாங் பகுதியில் சந்தேக நபர் பிடிபட்டார்.
ஆரம்ப விசாரணையில், அந்த ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் மற்றும் சரக்கு வாகன உரிமம் (GDL) இல்லாதது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், லாரியின் சாலை வரி காலாவதியாகியிருந்தும், காப்பீடு மட்டும் செல்லுபடியாக இருந்தது தெரியவந்தது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டதோடு ஓட்டுநர் மீது தண்டனைச் சட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது