
இஸ்கண்டார் புத்ரி, அக்டோபர்-4 – ஜோகூர் பாருவில் குழந்தைப் பராமரிப்பாளரிடம் விடப்பட்ட போது மூளையில் இரத்த கசிவுக்கு ஆளான 2 மாதக் குழந்தை, இன்னமும் சுல்தானா அமீனா மருத்துவமனையில் (HSA) சிகிச்சைப் பெற்று வருகிறது.
மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் எம்.குமரேசன் அதனை உறுதிப்படுத்தினார்.
அச்சம்பவம் 2001 சிறார் சட்டத்தின் கீழ் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
செப்டம்பர் 5-ஆம் தேதி மதியம் வாக்கில், குழந்தைப் பராமரிப்பாளரிடமிருந்து குழந்தையை கூட்டி வர சென்ற போது, அது மிகவும் பலவீனமான நிலையிலிருந்ததை கண்டு பெற்றோர் சந்தேகம் கொண்டனர்.
உடனடியாக HSA -வுக்கு கொண்டுச் செல்லப்பட்ட குழந்தைக்கு CT scan சோதனையில் மூளையில் இரத்த கசிவு கண்டறியப்பட்டது.