Latestமலேசியா

ஜோகூரில் ஜாலூர் கெமிலாங் கொடியை தலைகீழாக ஏற்றிய நபர் கைது

கூலாய், ஜனவரி-13-ஜோகூர், கூலாயில் அலுவலகமொன்றின் வெளியே தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, வெளிநாட்டவர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத் தளங்களில் வைரலான வீடியோவால் இச்சம்பவம் முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

விசாரணையில் இறங்கிய போலீஸார், கூலாயில் 38 வயது அவ்வாடவரை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் கைதுச் செய்தனர்.

சந்தேக நபர் 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தேசியக்கொடியை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என மீண்டும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!