
ஈப்போ, அக்டோபர்-31,
பிரபல அழகு சாதன தொழிலதிபர் டத்தோ ஸ்ரீ வீடாவுக்குச் சொந்தமான 700-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பொருட்களும், ஆடம்பர கார்கள் சிலவும் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.
மொத்தமாக RM 1 மில்லியன் ரிங்கிட்டுக்கு அவை விற்பனையாகின.
இந்த ஏலம் ஈப்போ, பெர்சியாரான் புக்கிட் மேரு பகுதியில் உள்ள அவரது பங்களா வீட்டில் நேற்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.40 மணி வரை நடைபெற்றது.
தொங்கும் ஆடம்பர சரவிளக்குகள், சோஃபா செட்கள், பியானோ, PS5, கீத்தார், மற்றும் Toyota Vellfire, Grand Hiace, BMW X7 போன்ற கார்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன.
ஒருவரின் விலகலுக்குப் பின் நோர்சாம்ரி அப்துல்லா என்பவர் அனைத்து பொருட்களையும் ஏலத்தில் வாங்கியதாக,
ஏல அதிகாரி எஸ். புனிதவதி கூறினார்.
வீடா, AH Design Communication Sdn Bhd நிறுவனத்திற்கு கடனைத் திருப்பிச் செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இந்த ஏலம் நடைபெற்றது.
அவரது சொகுசு பங்களாவில் கடந்தாண்டு நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்ற 5 மணி நேர சோதனையின் போது அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால் வீடாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ நேற்றைய நிகழ்வில் காணப்படவில்லை.



