
டெக்சஸ், ஜூலை-8 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மத்திய டெக்சஸ் மாவட்டத்தில் மட்டும் 84 பேர் உயிரிழந்தனர்.
சாரணியர் முகாம் சென்ற குழுவைச் சேர்ந்தவர்களில் குறைந்தது 27 மாணவிகள் மற்றும் பணியாளர்களும் இறந்தவர்களில் அடங்குவர்.
அக்குழுவிலிருந்த மேலும் 10 சிறார்கள் மற்றும் ஆலோசகரைக் காணவில்லை.
இதையடுத்து தேடல் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நான்காவது நாளாக முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனமழை தொடரும் என வானிலை ஆராய்ச்சித் துறை கணித்திருப்பதால், திடீர் வெள்ளம் மோசமாகும் என ஐயுறப்படுகிறது.
டெக்சஸ் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரவாகியுள்ளன.
வெள்ள சேதத்தைப் பார்க்கும் போது, மக்களுக்குப் போதிய முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் வார இறுதி வாக்கில் அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வெள்ளப் பாதிப்புக்குள்ளான இடங்களை நேரில் பார்வையிடுவார் என வெள்ளை மாளிகைக் கூறியது.