Latestமலேசியா

தங்காக் தொழிற்சாலையில் வியட்நாமியப் பெண் குத்திக் கொலை; சக நாட்டவர் கைது

தங்காக், மார்ச்-17-ஜோகூர், தங்காக் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெளிநாட்டுத் தொழிலாளியான பெண்ணொருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 8.40 மணியளவில் அந்த வியட்நாமியப் பெண் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் வந்த பரிசோதித்ததில், அவரது கழுத்தில் கத்திக் குத்து காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர் சவப்பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

விசாரணையில் இறங்கிய போலீஸ், 24 மணி நேரங்களுக்குள் சக நாட்டு பெண்ணை சந்தேகத்தில் கைதுச் செய்தது.

விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இருவருக்கும் தகராறு நிகழ்ந்ததா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!