
கோலாலம்பூர், ஏப்ரல்-4-Kelana Jaya வழித்தடத்தின், Abdullah Hukum LRT நிலையத்தில், பெண் பயணி இரயில் வரும்போது தடத்தில் விழுந்த சம்பவத்தில், பாதுகாப்பு முறைகள் சரியாக செயல்பட்டதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நேற்றைய இச்சம்பவத்தில், அவசர தடை அமைப்பு உடனடியாக செயல்பட்டு, பெரிய விபத்தைத் தவிர்த்ததாக அவர் சொன்னார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைவாக செயல்பட்டு, அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
39 வயது அம்மாது, முகத்திலும் கைகளிலும் காயமடைந்திருந்தார்.
சம்பவத்தால் இரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது, ஆனால் சுமார் ஒரு மணி நேரத்தில் மீண்டும் வழக்கமான சேவை தொடங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
பாதுகாப்பு முறைகள் இருந்தாலும், பயணிகளின் விழிப்புணர்வே முக்கியம் என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட அப்பெண் தரை வழுக்கியே தண்டவாளத்தில் விழுந்ததாக, பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் கூறியிருக்கிறது.



