
கோராட், ஜனவரி-15-தாய்லாந்து கோராட்டில் (Korat) கட்டுமான கிரேன் பயணிகள் இரயில் மீது சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 32 பேரை எட்டியுள்ளது.
சிறப்பு விரைவு இரயில் அதன் வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதிவேக இரயில் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.
அதில் 195-க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக் கொண்ட நிலையில் 64 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 3 பேரைக் காணவில்லை.
கிரேன் விழுந்த வேகத்தில் பல வண்டிகள் தடம் புரண்டு, தீப்பற்றின.
இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் சம்பவ இடம் விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார்.
இக்கோர விபத்து, தாய்லாந்தின் அதிவேக இரயில் திட்டத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.



