பேங்காக் , நவ 21 – நாய்கள் கடித்து குதறும் என அஞ்சி நான்கு வீடுகளை நோக்கி துப்பாக்கி சூடு பிரயோகம் நடத்திய உணவு விநியோகிப்பாளர் ஒருவருக்கு RM130 அபராதம் விதிக்கப்பட்டது.
தாய்லாந்தில் Nothaburi வட்டாரத்திலுள்ள 34 வயதுடைய சையநாரின் (Chaiyanarin) என்ற அந்த ஆடவர் நவம்பர் 17ஆம்தேதி குடியிருப்பு பகுதியில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை விநியோகிக்கச் சென்றபோது பல நாய்கள் தம்மை பார்த்து குரைத்ததால் அவை தம்மை தாக்கக்கூடும் என அஞ்சி தம்மிடம் இருந்த சுப்பாக்கியால் சுட்டுள்ளார்.
ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கச் சென்றபோது தம்மை நாய் கடித்திருப்பதால் பாதுகாப்புக்காக கடந்த வாரம்தான் துப்பாக்கி வாங்கியதாக அவர் தெரிவித்தார்.
நாய்களை மிரட்டும் நோக்கத்தில் தாம் துப்பாக்கி சூடு நடத்தியது மிகப் பெரிய விவகாரமாகிவிடும் என நான் நினைத்துக் பார்க்கவில்லை. இச்சம்பவத்திற்காக அந்த வீடமைப்பு பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் எவரையும் அச்சுறுத்தும் நோக்கத்தில் தாம் இந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லையென சையநாரின் கூறினார்.
பொதுமக்களுக்கு கவலை மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடத்துகொண்டதாக குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அதற்கான 130 ரிங்கிட் மதிப்பைக் கொண்ட 1,000 பாட் நாணயத்தை அவர் அபராதமாக செலுத்தினார்.