Latestமலேசியா

திரெங்கானு அரச குடும்பத்தை அவமதித்த பதிவு: MCMC விசாரணை

குவாலா திரங்கானு, பிப்ரவரி-22-சமூக ஊடகத்தில் திரங்கானு அரச குடும்பத்தைப் பற்றி வெளியிடப்பட்ட அச்சுறுத்தும், அவமதிக்கும், மற்றும் கேலிக்குரிய பதிவுகள் குறித்து, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரணை நடத்தி வருகிறது.

இப்பதிவு, இனம், மதம், மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான 3R அம்சங்களைத் தொட்டதாக கூறப்படுகிறது.

இது வெறுப்பை தூண்டி, சமூக ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதையடுத்து, பதிவை ஏற்றிய சம்பந்தப்பட்ட நபர், நேற்று பஹாங், லஞ்சாங் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டார்.

அவரின் கைபேசி மற்றும் சிம் அட்டை பறிமுதல் செய்யப்பட்டு, டிஜிட்டல் புலனாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

1998 MCMC சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!