
கோலாலம்பூர் அக்டோபர் 2- தீபாவளி பஜார் 2025–ஐ முன்னிட்டு, தலைநகரிலுள்ள சில பகுதிகளில் சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என கோலாலம்பூர் ஊராட்சி மன்றம் (DBKL) அறிவித்துள்ளது.
நேற்று தொடங்கி வரும் அக்டோபர் 19 வரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்வு சீராக நடைபெறவும், வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும்
இந்தச் சாலை மூடல்கள் துணைப்புரியும்.
ஜாலான் போனஸ் 6 (Jalan Bonus 6), ஜாலான் மஸ்ஜிட் இந்தியா (Jalan Masjid India), ஜாலான் ரக்யாட் பிரிக்ஃபீல்ட்ஸ் (Jalan Rakyat), ஜாலான் துன் சம்பந்தன் (Jalan Tun Sambanthan) மற்றும் லோராங் சான் ஆ தோங் (Lorong Chan Ah Tong) ஆகிய சாலைகள் மூடப்படுகின்றன.
இந்நிலையில் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் பயணங்களைத் திட்டமிடவும், மாற்று வழித்தடங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தவும் DBKL அறிவுறுத்தியது.