Latest
தீயில் கருகிய BMW 5 Series; ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்

பாலிங், டிசம்பர்-4,
கெடா, பாலிங்கில் திடீரென தீப்பற்றிய BMW 5 Series காரிலிருந்து விரைந்து வெளியேறியதால் அதன் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
Jalan Kupang – Gerik, Kampung Kemangi-யில் நேற்று காலை 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பேராக், கெரிக்கிலிருந்து பாலிங் செல்லும் வழியில் மேட்டுச் சாலையில் பயணிக்கும் போது காரில் ஏதோ தீய்ந்த வாடை வருவதை ஓட்டுநர் உணர்ந்தார்.
சுதாகரித்துக் கொண்டு அவர் காரிலிருந்து வெளியேறிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.
டாங்கி குழாயிலிருந்து பெட்ரோல் கசிந்ததால் தீ வேகமாகப் பரவி அந்த சொகுசு காரைக் கருகச் செய்தது.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு – மீட்புப் படையினர் தண்ணீர் மற்றும் நுரையைக் கொண்டு தீயை அணைத்தனர்.
கார் 90 விழுக்காடு தீயில் கருகிய நிலையில், மொத்த இழப்பு மதிப்பிடப்பட்டு வருகிறது.



