
துறைமுகம் முதல் நெடுஞ்சாலை வரை: தோட்டப் பாட்டாளியின் மகன் SP மணியம் உச்சம் தொட்ட கதை
கோலாலாம்பூர், பிப்ரவரி-11,
பேராக், பாரிட் புந்தார், பாகான் பாசீர் தோட்டப் பாட்டாளியின் மகன் SP மணியம்…
குடும்ப பின்னணியால் SPM வரை மட்டுமே படித்தவர்…
ஆனால், இன்றோ பார்போற்றும் APP Global Logistics Consortium Sdn. Bhd. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் திட்ட மேலாளர்.
அனைத்துலக ஆகாய – கடல் சரக்கு, சுங்க அனுமதி, கிடங்கு வசதி, மற்றும் உள்நாட்டு போக்குவரத்து வரை, மலேசியாவின் விநியோகச் சங்கிலி துறையில் முன்னேறி வரும் முக்கிய நபர்.
30 ஆண்டுகளுக்கு முன் 2 பேருடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது 15 பேருடன் செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தை இவர் எடுத்த எடுப்பிலேயே தொடங்கிடவில்லை; அனுபவத்தைக் கற்றுக் கொண்ட பிறகே தைரியமாக காலடி எடுத்து வைத்துள்ளார்.
அதுவும் பெரிய நிறுவனத்தைத் தொடங்கப் போகிறோம் என இவரும் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லையாம்
தற்போது பெரிய பெரிய நிறுவனங்களுக்கும் logistics சேவைகளை வழங்கி வருகிறது SP மணியத்தின் APP Global Logistics…
*INTERVIEW*
துணைக் குழுவினரை வைத்து வேலையை செவ்வனே செய்யும் இந்நிறுவனம், துல்லியத்திற்கு முன்னுரிமைக் கொடுக்கிறது;
அவ்வகையில் சிறு தவறுக்கும் இடமில்லை என்றார் இவர்.
Logistics துறையில் போட்டிகளைத் தவிர்க்க முடியாது; போட்டியில்லாமல் முன்னேறவும் முடியாது.
என்றாலும், சிறந்த சேவைத் தரம் இருந்தால், எத்தகையப் போட்டிகளையும் சமாளித்து பெயர் பெறலாம் என குறிப்பிடுகிறார் SP மணியம்.
தரம் நிரந்தரம் என்ற வகையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மைப் பெற்று நிற்கிறது APP Global Logistics.
வர்த்தகத்தை எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் வாடிக்கையாளர்களுடன் சுமூக உறவில் இருப்பதும், இவருக்குக் கைக்கொடுக்கிறது.
குடும்பக் கஷ்டத்தால் SPM-மைத் தாண்ட முடியாமல் போனாலும், சாதிக்க அது ஒரு தடையாக இல்லை.
தனக்குள் இருந்த திறமையை வெளிக்கொணர கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தியவருக்கு, விடாமுயற்சியே தாரக மந்திரமாக இருந்துள்ளது.
பணி நிமித்தம் ஓய்வில்லாமல் உழைத்த காலத்தில் இவருக்கு பெரிய உறுதுணையாக இருந்தவர் மனைவி ராஜாத்தி; இன்றும் இன்னொரு நிறுவனத்தை கவனித்துகொண்டு குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.
இவரின் மூத்த மகன் அர்வின் மணியம் APP Global Logistics நிறுவனத்தின் திட்ட மேலாளராக தந்தைக்கு உதவுகிறார்.
வாழ்க்கையில் சாதித்தவர்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், பெரும்பாலும் பல கஷ்டங்களை எதிர்கொண்டவர்களாவே இருப்பர்.
அப்படி இவருக்கும் ஒரு கதை உண்டு…
20 வெள்ளியைத் திருட்டிக்கு கோலாலாம்பூருக்கு வந்தேன்
கோலாலாம்பூர் வந்தவர் லாரி உதவியாளர், கட்டுமானப் பணியாளர், சூப்பர் மார்கெட் வேலையாள், பின்னர் சுபாங் விமான் நிலையத்தில் logistics வரை படிப்படியாக வேலை மாறி வளர்ந்தவர் SP மணியம்.
இந்த காலக் கட்டங்களில், என்னதான் திறமை இருந்தாலும், சக்திக்கு மீறியதை செய்கிறோமா என்ற கேள்வி இவரை ஆட்கொள்ளாமல் இல்லை.
நிதி அளவில் பயம் இருந்தது..இப்போ அது இல்ல
சாதிக்க குறுக்கு வழி கிடையாது; உழைப்பே உயர்வு என்பதே இளைஞர்களுக்கு SP மணியம் கொடுக்கும் அறிவுரையாக உள்ளது..
இதுபோன்ற துறைகளில் இந்தியர்கள் சாதித்து வருவது இவர்களுக்கான மேம்பாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்துக்கான பெருமையும் கூட.
சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு சிறந்த முன்னோடி என்பதும் மறுப்பதற்கில்லை.



