
கோலாலம்பூர், மார்ச் 11 – நாட்டின் நல்லிணக்கத்தை பேண, ஒற்றுமைத்துறை அமைச்சு மற்றும் போலிஸ் துறையின் வேண்டுகோளின் அடிப்படையில், ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் அவர்களுடன் கலந்தாலோசித்தப் பின் சம்ரி விநோத்துடனான பொது விவாதத்தை ரத்து செய்கிறேன் என்று அறிவித்துள்ளார் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ சரவணன்.
சம்ரி விநோத்தின் பதிவால் இந்துக்கள் மனம் புண்பட்டுள்ளதை மறுக்க முடியாது, ஆனால் பரந்த நோக்கத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த விவாதம் நாட்டின் அமைதியைக் குறைக்கக்கூடும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரிடமும் தான் பேசியிருப்பதாக கூறிய சரவணன், பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த சுயமான நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்றார் அவர். இதில் போலிஸின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி போலிஸ் புகார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார.
இந்த இக்காட்டான சூழலில் அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பார்ப்பட்டு ஒன்றிணைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் என்றார் சரவணன்.
அதே சமயத்தில் இந்த விவகாரத்தில் எந்த ஒரு அரசியல் நோக்கத்திற்காகவும் தான் குரல் கொடுக்கவில்லை என்றும் தன்னுடைய சமயத்தின் மீது பிறர் இழிவு ஏற்படுத்தும்போது தற்காக்க வேண்டிய உரிமை தனக்கு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.