
“நான் மரணப் படுக்கையில் உள்ளேனா?” சாக்கிர் நாயக் மறுப்பு
கோலாலம்பூர், பிப்ரவரி-10,
தாம் கோலாலம்பூர் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் உள்ளதாகக் கூறப்படுவதை, சர்ச்சைக்குரிய மத போதகர் Dr சாக்கிர் நாயக் மறுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிய அச்செய்தி முற்றிலும் அபத்தமானது என்றார் அவர்.
தாம் உண்மையில் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருப்பதை, தனது வழக்கறிஞர் வாயிலாக அவர் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவில் தீவிரமாகத் தேடப்படுவதால், மலேசியாவில் நாடு கடந்து வாழ்ந்து வரும் சாக்கிர் நாயக், மருத்துவமனையில் _ventilator_ எனப்படும் செயற்கை சுவாசக் கருவியில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட வார்டில் இருப்பதாக முன்னதாக தகவல்கள் பரவின.
சில மாதங்களுக்கு முன், தமக்கு ஏய்ட்ஸ் நோய் இருப்பதாக பரவிய வதந்திகளையும் “வெறுப்பு பேச்சு” எனக் கூறி அவர் மறுத்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் மீண்டும் வரும் வதந்திகள், அவரது பிரபலத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியே என அவரைச் சார்ந்தவர்கள் கூறிக் கொள்கின்றனர்.



