Latestமலேசியா

நிலச் சொத்துகளுடன் தொடர்புக் காரணத்தால் இந்து அறப்பணி வாரியங்கள் மாநில ரீதியில் நிர்வகிக்கப்படுவதே சிறப்பு – ஒற்றுமை அமைச்சு

கோலாலாம்பூர், மார்ச்-5-இந்து அறப்பணி வாரியங்களை மாநில அரசாங்கங்களே நிர்வகிக்க வேண்டுமென்பதில், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு உறுதியாக உள்ளது.

நிலம் மற்றும் சொத்துக்கள் மாநில அரசின் அதிகாரத்தில் உள்ளதே அதற்குக் காரணம் என, துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறினார்.

“இந்து அறப்பணி வாரியம் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகார வரம்பில் இருப்பது உண்மைதான்; ஆனால் அது கோயில்களின் நில உரிமை, நிர்வாகம், கடுமானம் போன்றவற்றுடன் அதிக தொடர்புடை கொண்டுள்ளது; எனவே மாநில அரசாங்கள் அதனை நிர்வகிப்பதே சரியாக இருக்குமென அமைச்சு கருதுகிறது” என்றார் அவர்.

உதாரணத்திற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை சுட்டிக் காட்டிய அவர், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அது அமைக்கப்பட்டாலும், மாநில அரசின் மேலாண்மையில் இருப்பதாக சொன்னார்.

இந்த அணுகுமுறையானது, இந்து அறப்பணி வாரியங்களின் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சட்டப்பூர்வமாகவும், ஒழுங்குமுறையாகவும், மாநில அரசு சாசனங்களுக்கு ஏற்பவும் நடைபெறுவதை உறுதிச் செய்ய முடியுமென்றார் அவர்.

இந்நிலையில், எந்த மாநிலத்திலும் இந்த இந்து அறப்பணி வாரியங்களை அமைக்க விரும்பும் இந்து அமைப்புகள், தத்தம் மாநில அரசுகளிடம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக யுனேஸ்வரன் கூறினார்.

இந்து அறப்பணி வாரியங்கள் மாநில அளவில் தான் அமைக்கப்பட வேண்டுமெனக் கூறி மேலவை உறுப்பினர்களை யுனேஸ்வரன் குழப்பியதாக, உரிமைக் கட்சியின் செயலாளர் சதீஸ் முனியாண்டி குற்றம் சாட்டியதை அடுத்து இந்த விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!