
வாஷிங்டன், ஜூலை 9 – குழந்தைகளிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேட்டல் நிறுவனம் முதல் ரக நீரிழிவு நோயுடன் கூடிய பார்பி பொம்மையை வெளியிட்டுள்ளது என்று நிறுவனத்தின் துணைத் தலைவர் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய ரக பொம்மையின் உடலில் இரத்த சர்க்கரை அளவை கண்டறியும் CGM சாதனமும் இன்சுலின் அளவை அனுமதிக்கும் இன்சுலின் சாதனமும் பொருத்தப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக மேட்டல்நிறுவனம் பார்பி பொம்பை மாடல்களை பல்வகைப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்ததென்றும்
கடந்த 2019 ஆம் ஆண்டில்,”பாலினத்தை உள்ளடக்கிய” பொம்மைகள் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான பொம்பைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.