Latestமலேசியா

நீர் சார்ந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவீர்; ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு உத்தரவு – கல்வி அமைச்சு

ஈப்போ , ஏப் 5- கெடாவில் சுங்கைப் பட்டாணி, Pantai Merdeka கடலில் கயாக் படகு சவாரி செய்தபோது பெர்லீஸ் ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தின் இரு பயிற்சி ஆசியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் நீர் சார்ந்த செயல்பாடுகள் உட்பட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த பயிற்சி ஆசிரியர்களின் குடும்பத்தினரை நேற்று அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனையில் சந்தித்தபோது, ​​கல்வித்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அஸாம் அகமட் (Mohd Azam Ahmad) இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகக் கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோ ( Wong Kah Woh ) தெரிவித்தார்.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பயிலும் நமது குழந்தைகளின் பெற்றோர்கள் மனநிம்மதியுடன் இருப்பதையும், அமைச்சிடமிருந்து உடனடிப் பதிலைப் பெறுவதையும் உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை இதுவென Kampung Dato Ahmad Said,டில் Raja Permaisuri Bainun தேசிய இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற, பேராக் பள்ளிகளுக்கான பேருந்து ஒப்படைப்பு விழாவில் கலந்துகொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டு, முப்பது ஆண்டுகள் பழமையான தற்போதைய பேருந்துக்குப் பதிலாக எஸ்.எம்.கே ராஜா பெர்மைசூரி பைனூன் பள்ளிக்கு ஒரு புதிய பள்ளிப் பேருந்தை வழங்கியதோடு மட்டுமல்லாமல், பள்ளியின் தொழுகைக்கூடத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சு 50,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்ததையும் Wong Kah Woh அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!