
நீலாய், டிசம்பர் 23-நேற்று காலை 7.08 மணியளவில், நெகிரி செம்பிலான், நீலாய், டேசா பால்மா பகுதியில் திடீரென ஒரு வெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சம்பவ இடத்தில் ஆணிகள் சிதறிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், அது சேதம் விளைவிக்க திட்டமிடப்பட்டிருக்கலாம் என போலீஸ் தெரிவித்தது.
அருகிலுள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை, சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருட்களாகும்.
தவிர, வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 250 மீட்டர் தொலைவில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகனமும், அதில் வெடிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது.



